முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உன்னைத் தவிர!!

பிடித்த பாடல் எதுவென்று கேட்டால் சற்றும் யோசிக்காமல் சொல்கிறேன் உனக்கு பிடித்த பாடலொன்றை!

பிடித்த நிறமென்றால் அதுவும் நீ பிடித்ததாய் சொன்ன நிறமே!

உனக்கு பிடித்த உணவே பிறகு எனக்கும் பிடித்ததாயிற்று!

நீ வாழ விரும்பிய நகரத்தில் எனக்கு வாழ பிடித்திருக்கிறது இப்போது!

இப்படி உனக்கு பிடித்தவையெல்லாம் எனக்கும் பிடித்தவையாகிப் போயின எனக்கே தெரியாமல்..

எனக்கு பிடித்தவையென்று உண்மையில் எதுவுமே இருந்ததில்லை உன்னை தவிர!!‍

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!