முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கடந்து போக ஆசைப்படுகிறேன்!!

கடந்து போக ஆசைப்படுகிறேன் நான்,
உங்கள் எல்லாரையும்..

மலர் ஒன்று எப்படி உங்கள் மேல் பட்டும் படாமல் விழுந்து தரையிறங்கியதோ,

வானவில் ஒன்று நீங்கள் மொட்டை மாடி வந்த சில நிமிடங்களில் எப்படி மறைந்து போனதோ,

விமானம் ஒன்று நீங்கள் பார்த்து கொண்டிருந்த போதே எப்படி காணாமல் போனதோ,

எங்கிருந்தோ நீங்கள் தூக்கி எறிந்த அந்த கல் எப்படி குளத்தில் சிறு அதிர்வுகளோடு மூழ்கியதோ,

இளையராஜா இசை ஒன்று எப்படி உங்களை ஊடுருவி உள்ளூரக் கடந்ததோ,

அப்படி எல்லாம் ஆசைப்படுகிறேன் நான்,
உங்களை கடந்து போக!!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள்‌ இல்லாத நேரம்..

எரிபொருள் தீர்ந்து போன இருசக்கர வாகனத்தை சற்று தரையோடு சாய்த்து வைத்தால் எஞ்சிய தூரத்தை கடந்துவிடலாம் என்று முயற்சிப்பதை போல, அவள் குரல் சேமித்த கைபேசியை காதோடு சாய்த்து வைத்து அவள் இல்லாத இந்நேரத்தை அக்குரல் கேட்டு கடந்திட முயற்சிக்கிறான் இங்கே ஒருவன்!!

புரிதல்!

வாழ்க்கையில் யாரும் யாரையும் புரிந்து கொள்வதில்லை.. நாம் புரிந்து கொண்டதாக  நினைத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் புரிந்து கொண்டதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள் அவ்வளவே!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!