முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனிதன் ஆனதன் விளைவுகள்!!

சாயங்கால நேரம், சாலையில் அடிபட்டு சாகக் கிடக்கிறது குட்டி நாயொன்று.. விட்டால் போதுமென அலுவலகம் விட்டு வீடு போய் சேரும் பரபரப்பில் சில கண்கள் வெறுப்போடும், பல கண்கள் பரிதாபத்தோடும் நாயைக் கடக்கின்றன வெறுமனே பார்த்தபடியே.. மனம் பொறுக்காத அந்தவொரு நொடியில் நீலச் சிலுவையை அழைத்துப் பார்க்கிறேன்.. எடுக்கப்படாத அந்த அழைப்பு தந்த ஒருவித குரூர நிம்மதியோடு இப்போது கடந்து போகிறேன் நானும்!!

பிரச்சனையே அதுல தான 🤦🏻‍♂️

'விட்டுக் கொடுத்து வாழ்றது தான் வாழ்க்கை' Correct-u தான்.. ஆனா இங்க பிரச்சனையே யார் விட்டுக்‌ கொடுக்குறாங்க அப்படின்றதுல தான!!

காதலிக்க தொடங்குகிறேன் நான்♥️♥️

நான் செய்தது தவறுதான், நன்றாகவே தெரியும் எனக்கு.. மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டியதும், சமாதானம் செய்திருக்க வேண்டியதும் நியாயமாக நான்தான்.. ஆனாலும் என்ன செய்ய? அதற்கு நேரெதிராக நீயாக வந்து என்னை சமாதானம் செய் என முகத்தைத் திருப்பிக் கொண்டு அலைகிறேன் வீராப்பாக.. அந்த மன்னிப்புக் கோரப்படும் வரை இப்படியே இறுக்கத்துடன் இருப்பதாக உத்தேசமும் கூட.. இதெல்லாம் ஈகோ-வா அல்லது இளம்பிள்ளைத் தனமா எனத் தெரியாது திரியும் ஒரு பைத்தியத்திடம் இருந்து வேறென்ன எதிர்பார்த்து விட முடியும் நீ!? செய்துவிட்ட தவறின் குற்ற உணர்ச்சியில் இருக்கும் என்னை, இன்னும் வெறுக்கவில்லை நீ, இன்னமும் விரும்பத்தான் செய்கிறாய் என்பதை இந்த மன்னிப்புக் கேட்டல்தான் உறுதிபடுத்துகிறது.. நான் உனக்கு வேண்டும் என்பதற்காக, என்னை உன்னில் தக்க வைப்பதற்காக செய்யாத பிழைக்கு நீ கேட்கும் இந்த மன்னிப்புதான் உன் காதலானது! செய்யாத ஒரு தவறுக்கு மன்னிப்பு கேட்க வைக்குமளவு ஈவு இரக்கமற்றவன்‌ அல்லன் நான்.. உன்னிடம் மட்டுமே இப்படி‌, அதற்காக ஆணாதிக்கவாதியும் அல்லன் நான்.. இவ்வளவிலும் என் காதல் நீயறிவாய் என்பதே என் காதலானது.. மன்னிப்புக் கேட்பதின் வழி நீ...

இன்னமும் கேட்கிறது!!

நீ பேசி முடித்து அணைத்து வைத்த பின்னரும் கைபேசி இன்னமும் என் காதருகே.. நீ பேசிக் கொண்டே இருப்பதாய் தோன்றுவது பிரம்மை எனப் புரிய சில நொடித் துளிகள்!!

ஏதுமின்மை கணக்கிறது!!‍

மலர்தலை போலக் கூட வேண்டாம், உதிர்த்தலை போன்றாவது ஒரு பிரியத்தை நிகழ்த்திவிட்டு போயேன் தயவுசெய்து!! ஏந்தி கொள்ள கைகள் இருக்கிறது அது உன் உச்சபட்ச வெறுப்பாயினும் சரி, ஏதுமின்மை தான் ரொம்பவும் கணக்கிறது!!