கடந்து போக ஆசைப்படுகிறேன் நான், உங்கள் எல்லாரையும்.. மலர் ஒன்று எப்படி உங்கள் மேல் பட்டும் படாமல் விழுந்து தரையிறங்கியதோ, வானவில் ஒன்று நீங்கள் மொட்டை மாடி வந்த சில நிமிடங்களில் எப்படி மறைந்து போனதோ, விமானம் ஒன்று நீங்கள் பார்த்து கொண்டிருந்த போதே எப்படி காணாமல் போனதோ, எங்கிருந்தோ நீங்கள் தூக்கி எறிந்த அந்த கல் எப்படி குளத்தில் சிறு அதிர்வுகளோடு மூழ்கியதோ, இளையராஜா இசை ஒன்று எப்படி உங்களை ஊடுருவி உள்ளூரக் கடந்ததோ, அப்படி எல்லாம் ஆசைப்படுகிறேன் நான், உங்களை கடந்து போக!!