முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புரியாத புதிர் தான்!!

நமக்கு ரொம்ப பிடிச்ச பொருளையோ அல்லது ரொம்ப பிடிச்ச மனுஷங்களையோ தொலைவுல வச்சு ரசிக்குறப்போ மனசுக்குள்ள ஒரு Pleasure feel ஒண்ணு இருக்கு! ஆனா, அந்தப் பொருளோ, மனுஷங்களோ நம்ம life-ல நம்ம கூட நெருங்கி வரப்போ, Fade Out ஆன கானல் நீரா மாறிப் போறது மட்டும் இயற்கையா அமையுதா இல்லை எனக்கா தோணுதா அப்படின்றது இப்ப வரையில் புரியாத புதிர் தான்!!

உனக்காக மட்டும்!!

எங்கிருந்தோ உள் புகுந்து ஊடுருவுகிறது இல்லாத அந்தக் கடவுள் நம்பிக்கை, உனக்காக வேண்டிக் கொள்கையில் மட்டும்!!

காத்திருப்பு மட்டுமே தெரியும்!!

உதிர்ந்து கொண்டிருக்கிறது, நாட்கள் ஒவ்வொன்றாக! உதிர தொடங்கி விட்டன, கனவுகளும் ஆசைகளும் கூட! எதற்காக இந்த காத்திருப்பு என்றும், எத்தனை காலமென்றும் கூட மறந்து போகலாம் எனக்கு, அத்தனைக்குப் பின்னும் கூட நான் காத்து கொண்டே தான் இருக்கிறேன், இருப்பேன்! இப்போதெல்லாம் பழகிவிட்டது காத்திருப்பு எனக்கு.. வேறு என்ன செய்வதென்று தெரியாது.. தெரிந்ததெல்லாம் அது மட்டுமே இப்போது! காத்திருக்கிறேன்!!

ஆகச்சிறந்த போதை!!

யாரோ எங்கோ நம்மை  முழுதாய் இன்னமும் ரசித்துக் கொண்டிருப்பார்கள், கொண்டாடிக் கொண்டிருப்பார்கள், தீர்க்கமாய் காதலித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள் என்ற இறுதித் துளி நம்பிக்கையை விட ஆகச் சிறந்த போதை வேறென்ன இருந்து விடப் போகிறது இந்த உலகில்!!

தொலைவது நிச்சயம்!!

எதைத் தேடிக் கொண்டிருக்கிறேன் என்று தெரியவில்லை இதுவரையில்.. தேடலின் முடிவில் எதையேனும் தொலைத்திருப்பேன் என்பது மட்டும் நிச்சயம்!!

அலுக்காத இளையராஜா 🖤🖤

இளையராஜாவின் ஒரு பாடலை ஒரு முறை கேட்டுவிட்டு அடுத்த பாடலுக்குத் தாவி விடுபவர்கள் ஆச்சர்யம் அளிக்கிறார்கள்.. காலையில் இருந்து முப்பதாவது முறையாக ஓடிக் கொண்டே இருக்கிறது  "துள்ளி எழுந்தது பாட்டு" எப்போதுதான் அலுக்கிறதென்று நானும் பார்க்கிறேன்!!

தவிர்த்திருக்கலாம்!!

துன்பத்தில் ஆதரவாய் பற்றிக் கொள்ளவும், பயத்தில் பாதுகாப்பதற்கும், மகிழ்ச்சியில் ஆசையோடு கோர்த்துக் கொள்ளவும், காய்ச்சல் கண்டாலும், கொடுங்கனவு என்றாலும் மீண்டு வருவதற்கும், உலகமே வெறுத்தாலும் மறுத்தாலும் முன்னோக்கி எடுத்துச் செல்லவும், இன்னும் இவ்வுலகின் அனைத்தையும் எதிர்கொள்ளவும் உன் கைகள் போதுமாயிருந்தது! குழந்தைக்கு தாயின் மடியை போல அதுவே என் அடைக்கலமாயிருந்தது! அதுவே என் மொத்த உலகமுமாயிருந்தது!! வருடங்கள் பல கழித்து உணர்ச்சிகளற்று பழைய நண்பர்கள் என மற்றவர் முன்னிலையில் கைகள் குலுக்கிக் கொண்ட அத்தருணத்தை, நீயாவது இல்லை நானாவது தவிர்த்திருக்கலாம் !!

நம்பு, ஏமாறு!

எதுவும் நிரந்தரமில்லை  என்றொரு நிலையை எட்டி விடாதே எக்காலத்திலும்.. அது உண்மையாகவே இருப்பினும் கூட, எதையேனும் நிரந்தரமென பற்றிக்கொள் நம்பு  ஏமாறு  மீண்டும் நம்பு  இல்லேல் இவ்வையம் உனக்கு சூன்யம்!!