முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காதல் செய்யாதே என் கணவா !

காதல் செய்யாதே என் கணவா, தீராத காதல் செய்.. இளமையின் மொத்தமாய் என் கண்கள் எழில் தொடுக்க, அதில் பித்தாகி நீ மூழ்கி எனை காதல் செய்யாதே என் கணவா.. துயர்படும் தருணங்களில் எல்லாம் துளிர்விட்டு எழும் கண்ணீர்த் துளிகளை உன் கரங்களால் நீயள்ளி உன் உயிர் ஊற்றி எந்தன் துயர் மாற்றும் காதல் செய் . . இளமை துள்ளும் சோலையாய் கனவுகளின் வாழ்விடமாய் கனிந்து நிற்கும் என் மனதினை காதல் செய்யாதே என் கணவா.. கனவுகளைத் தொலைத்த வெறுங்காடாய், வாழ்வியல்கள் விளையாடும் மைதானமாய், பொழுதொரு மாற்றமும் நொடிக்கொரு ஏமாற்றமுமாய் காணும் என் மனத்தினை காதல் செய் . . வெள்ளிக் கொலுசுகள் சறுக்கு மரமாடும் வாழைத்தண்டாய் செழித்து நிற்கும் என் மென் பாதங்களை காதல் செய்யாதே என் கணவா.. வாழ்வின் சுழற்சியால் வனப்பிழந்து வலிகள் தாங்கியதன் அடையாளமாய் வரிகள் தாங்கி நிற்கும் என் பாதங்களை காதல் செய் . . பருவ வயதின் நெளிவுகளைப் பருகி உடல் மொய்க்கும் காதல் செய்திடாதே என் கணவா.. பிரசவித்து உடல் பருத்து வளைவுகளை நான் தொலைத்த பின்னும் என் தேகத்தை ஓயாமல் காதல் செய் . . முதலாம் அத்தியாயத்தில் முத்தான வார்த்தைகளைக் கொத்தாக உதிர்க்கும் இருவரிக் கவிதைய...

அவன் - கவிதை

அத்தனை நெரிசல் தாங்கும் பேருந்திலும் அறியாதவள் தேகம் உரசிடாது நிற்கும் அவன் - கவிதை.. அருகேயவள் ஆடைத் திருத்தங்களில் அனிச்சையாய் திசை திரும்பும் அவன் - கவிதை.. அரவமற்ற தனிமை நெருக்கத்திலும் அத்துமீறா ஆளுமை காத்து நகைக்கும் அவன் - கவிதை.. ஆர்ப்பரிக்கும் ஊடல் பின்னே அரவணைத்து முத்த மிடும் அவன் - கவிதை.. வெளிப்படையாய் பேசிவிட்டு வெட்கப்படும் தருணங்களில் அவன் - கவிதை.. வேடவர் கை குத்துப்பட்டு வெள்ளந்தியாய் சிரிக்கையிலும் அவன் - கவிதை.. வெண்ணிலவை தள்ளி வைத்து பெண்நிலவை ரசித்திடுகையில் அவன் - கவிதை.. தோழியவள் தோள் சாய தொல்லையிடா கணங்களிலே அவன் - கவிதை.. தேநீர் நேரக் கதைகளிலே தேவதையவள் கண் திருடுவதில் அவன் - கவிதை.. சில்மிஷங்கள் செய்கையிலே சிணுங்கல்களில் லயிக்கையிலும் அவன் - கவிதை.. கனம் கூடிய கணங்களிலே கண்ணீரை மறைத்து விடும் அவன் - கவிதை.. பிணி தன்னை ஏந்தையிலும் பிடி தளர்த்தா நேசமிடும் அவன் - கவிதை.. பிஞ்சுவிரல் தீண்டிடுங்கால் பிள்ளையதன் சித்திரமாய் அவன் - கவிதை.. செல்ல மகள் வாடிடுங்கால், செத்து கணம் மீண்டிடும் அவன் - கவிதை.. பெற்றவனின் மனமறிந்து உள்ளமதை அடக்கிடுங்கால் அவன் - கவிதை.. உச்சி வ...

என் சொல்வேன் என் கிழவா!

என் சொல்வேன் என் கிழவா.. என் சொல்வேன்.. உனை என் கடவுளெனச் சொல்ல ஆசைதான்.. ஆவியாய் வந்தெனை அடித்தோட விட அப்போதேனும் வருவாயென்ற சிறு நப்பாசை தான்.. வா வா தலைவா என்றழைக்க ஆசைதான்.. அதரம் விரிய அறிவு கெட்டவனென ஏசி, நீயும் நானும் சமமென்றுரைத்து நீயென் தலை குட்டிச் செல்ல அதை நான் ரசித்திட ஆசைதான்.. அலங்காரக் கண்ணாடிக்குள் எனை நான் கண் டேமார்ந்த காலம் போய் நீ வீசிய பழைய வெங்காயத்தில் தொலைந்தேன் மீளவில்லை இன்னும்.. உரிக்க உரிக்க செதில் செதிலாய் விரிந்து வையம் அளக்கிறேன், பரவசம் கொள்கிறேன் பல கோணங்களிலும்.. சாக்கடைக்குள் வீசப்பட்ட செல்லாக் காசாய்க் கிடந்தோம், காந்தமென வந்தாய், ஈர்த்தாய், கரை சேர்த்தாய்.. இதோ இங்கே பொக்கிஷமாய் சில, போர்வெளியில் சில, போகுமிடமெங்கும் சில என உன் போதனையிலே சிரம் உயர்த்தி சிலிர்க்கின்றோம்.. சாதிமதக் கோட்பாட்டு விளக்கினோடு சுற்றித் திரிந்த விட்டிலென மாண்டிருந்தோம்.. புட்டத்தில் உதைத்து, புத்தியை விதைத்து மின்மினியாக்கினாய்.. இதோ இப்போது விண்ணெங்கும் மிளிர்ந்து பறக்கின்றோம்.. கத்தியை வீசியிருந்தால் காலச்சுழலில் காயம் காணாமல் போயிருக்கும்.. மாறாய் நீ கருத்தினை வீசினாய்....

கற்பனையில் நிஜம் கலந்த ஒரு கதை

இந்தப் பதிவ நீங்க படிக்க ஆரம்பிக்கும் போதே ஒரு புதிய உலகத்திற்குள் பயணிக்கும் உணர்வை ஏற்படுத்தும். புதிய உலகம் தேடி பயணிப்போம் பயணிகளாய்.. எல்லாவிதமான சராசரி மனிதர்களின் தேடலும் முடிவும் காலை தொடங்கி இரவுக்குள் அஸ்தமனம் ஆகிவிடுகிறது .மிகச்சிலரின் வாழ்க்கை மட்டும் இரவின் இருளில் தொடங்கி விடியலுக்குள் முடிவு பெறுகிறது.அந்த இரவு தேசத்தின் இளவரசி திவ்யா என்கிற திவ்யதர்ஷினியின் வாழ்க்கையை அவள் வழியில் அறிவோம். மழைக்கால ஈசல்கள் போல ராத்திரி ஒன்பது மணிக்கு அந்த ரோட்டுல இருக்குற எல்லா பஸ் ஸ்டாப்லயும் நாங்க எல்லோரும் யாருக்காவது காத்திருப்போம்.எங்களது ஆடையும் அலங்காரமும் எங்களை அத்தனை இருளிலும் வெளிச்சமிட்டு காட்டும் .காயமின்றி காசோடு வீடு திரும்பணும்னு வேண்டுதலோட கிளம்புவோம்.எப்படியும் என்னை போல 25 வயச தாண்டாதவங்க எதாவது ஒரு அறைக்குள் எளிதில் அடங்கிருவோம்.ஆனால் 40 தாண்டியவங்க நிறைய நாள் வெறும் கையோட பசியோட காத்திட்டே இருப்பதை பாக்க முடியும் .வாங்குற பணம் எங்களோட மருத்துவ செலவுக்கும் மேக்கப் செலவுக்கும் போலிஸ்காரங்களுக்குமே சரியா இருக்கும் .அப்புறம் எங்க நாங்க சேமிக்கறது.உண்மைய சொன்னா இப்ப நான்...

நிலவொளியில் என் நிழலும் நானும்

 நிழலாடும் நிலவொளியில், முடிவில்லாது நீளும் இந்த முன்னிரவில், கயிற்றுக் கட்டிலில் உடலிட்டு தலை மட்டும் மெல்ல சாய்க்கிறேன் உன் மடியில்.. அன்றில் சுற்றித்திரிந்த ஜோடிப் புறா ஒன்று, தன் இணையுடன் காதல் கொள்ளும் கீச்சொலி கேட்டு, தலைதூக்கி காண்கிறேன் தென்னங்கீற்றுகள் தாண்டிய பௌர்ணமி கற்றைகளை இழுத்துப் பற்றி பிரதிபலிக்கும் உன் முகத்தை.. மெலிதாய் நாசி நுழையும் மண் வாசம் மனம் வருட, நாம் விரும்பி தொலையும் புத்தகமொன்றை கையில் கொண்டு, மறுகையால் என் கன்னம் கிள்ளிவிட்டு புத்தகத்தின் முதல் பக்கத்தை புரட்டுகிறாய் நீ.. நாணிய அந்த கன்னங்களில் என் கண்கள் முழுதும் படர விடாது, அடங்காமல் அங்குமிங்கும் ஆடித்திரியும் கூந்தலை உன் காதோரமாய் அடக்கிட முயல்கிறேன் நான்.. கண்கள் ரெண்டும் புத்தகம் விட்டு அகலாது, கழுத்தை மட்டும் ஒருவாறு சாய்த்து சிலிர்த்துக் கொண்டே சிரிப்பை புதைக்கிறாய் நீ.. இன்பமென இன்னும் ஏதேனும் இவ்வுலகினில் உண்டா என்ன? இவ்விரவினில் இதை விடவும்  !!