பார்த்தாயா இந்தக் காலம் தான் எவ்வளவு வேகமாய் நகர்கிறது, அதுவும் நம்மை இழுத்துக்கொண்டே.. நெற்றி சறியும் நரைமுடி ஒதுக்கும் காலத்திற்கு வந்துவிட்டாய் நீ.. கண்ணாடியின்றி பொடி எழுத்துக்களை தடவத் தொடங்கி விட்டேன் நான்.. ஆனாலும் பாரேன், நினைவோடையில் மிதக்கும் அந்த காட்சி மட்டும் இன்னும் இளமை ததும்ப அப்படியே நிற்கிறது.. அதில் எப்போதும் ஒருவன் இன்னமும் தரை தேய bell bottom அணிந்து கொண்டு ஒய்யாரமாக நிற்கிறான்.. அவனைக் கண்டும் காணாதது போலவே அந்த ஒருத்தி எப்போதும் தரையோடு விரல் தேய, தலைமயிர் கோதியபடி நிற்கிறாள் !!