நானே சேகரித்து கொண்ட உன் பொருட்கள், உன் பரிசுகளாலேயே நிரம்பிப் போன என் அறை அலமாரிகள், உன்னிடமிருந்து திருடிக் கொண்ட உன்னுடையதும், நமக்காய் நாம் எடுத்துக் கொண்டதுமாய் பழைய புகைப்படங்கள், உனக்குப் பிடித்த இடங்கள், உன் ரிங்டோன், உன் உடை வாசம், உன் பெயர் என இவையேதும் உனை நினைவுபடுத்தினால் கூட பரவாயில்லை எனக்கு.. யாரோ யாரையோ நினைத்து எழுதி வைத்த பாடல் வரிகளுக்கும், எவரோ எதற்கோ மீட்டிய வயலினுக்கும், பியானோவுக்கும் இரவெல்லாம் உனை நினைத்து உறக்கமின்றி தலையணை நனைய நான் கண்ணீர் வடிப்பது எந்த விதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை எனக்கு !!