முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அவள்‌ பெயர் ராணி!!

துக்கமணி ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டிருக்கிறது தேவாலயத்தில்.. கேட்க நாதியற்று இறந்து போன அவள் பெயர் ராணி.. பிச்சைகாரியாய் ரோட்டோரம் செத்து கிடந்தாள்.. காசு கொடுத்தும் கொடுக்காமல் ஏமாற்றியும் அவளை புணர்ந்தவர்கள் யாரையும் காணோம் அங்கு.. முதல் முறை ஓர் இரவு நிம்மதியாய்‌ உறங்குகிறாள்‌ அவள்.. முதல் முறையாய் ஓர் இரவு அழாமல் கடக்கிறது அவளுக்கு, அதோ அடைமழை விடாது பெய்து‌ அழுது தீர்த்துக் கொண்டிருந்தது அவளுக்கும்‌ சேர்த்து.. கண்டும்‌ காணாததை போல் சென்றவர்களில் யாரோ கண்ணியமானவர்கள் நான்கு பேர் தூக்கி செல்கிறார்கள் அவளை..  இதோ கடைசி யாத்திரைக்கு போகிறாள் அவள் பல்லக்கு பாடையில் ஒரு ராணியை போல!!

அந்த காலத்து School Love♥️

ஐந்தாறு மாதங்கள் போராடி அடித்து பிடித்து எப்படியோ Attendance register-இல் இருந்து அவள் தொலைப்பேசி எண்ணை தேடிக் கண்டுபிடித்து எடுத்து, 'எப்ப call பண்ணிணா அவ எடுப்பா, அவள் குரல் கேட்டாலே போதும்' என எண்ணியபடி, அலைபேசியில் அந்த எண்களை அழுத்தும் போது மனதில் எழும் அந்த என்னவென்றே தெரியாத உணர்வு சங்கமம் தான் அப்போதைய பள்ளிக் காதலின் இலக்கணம்!

எரிகிறது என் ஆன்மா!!

இந்த பின் அந்தி இரவுகளில் உன் நினைவுகளை போர்த்தியபடி நான்‌ மட்டும் கிடக்கிறேன்‌ இங்கே.. நீ இட்டு போன ஒவ்வொரு முத்தத்தின் உஷ்ணத்திலும் எரிந்து கொண்டிருக்கிறது என் ஆன்மா!!

ஏன்னா, டிசைன் அப்படி🤦🏻‍♂️

அத்தனை பிரச்சனைகளையும் சிரித்தப்படியே மறைத்து விடுவது தான் எத்தனை சுலபமாய்‌ இருக்கிறது.. அழுது நடித்து காரியம் சாதித்துக் கொள்ளும் கலை தான் கைகூட மறுக்கிறது எவ்வளவு முயற்சி செய்தாலும்!!

என் சரியான தவறு நீ!!

என் தவறுகளில் மிக சரியானதுமாய் மிக பிடித்தமானதுமாய் நீ மட்டுமே இருக்கிறாய் எப்போதும்!!

காரணம் கூட தெரியாமல் தொலைஞ்சு போறதோட வலி💔

தொலைத்தவர்கள் வேண்டுமானால் தேடாமல் இருக்கலாம்.. ஆனால் தொலைந்த ஒவ்வொருவருமே தேடிக் கொண்டேதான் இருக்கின்றனர் இன்னமும் தாங்கள் தொலைக்கப் பட்டதற்கான காரணத்தை!!

பறவை மீது பொறாமை எனக்கு!!

காற்றின் திசையை முன்கூட்டியே அவதானித்து இறக்கைகள் இரண்டையும் அகல விரித்து இன்பமாய் பறக்கத் தயாராகும் ஒரு பறவையைப் பார்த்து பொறாமைப் படுவதைத் தவிர, இத்தனை வருட இந்த மானுட வாழ்வில் இந்த ஆறாம் அறிவைக் கொண்டு பெரிதாக நான் எதையும் செய்ததில்லை, செய்ததாக நினைவுமில்லை.. அதோ அந்தப் பறவை எவ்வளவு உயரத்தில் மிதந்துகொண்டே பறக்கிறது பாருங்களேன்!!

அன்பின் நிலையும், நிதர்சனமும்!!

ஒருவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்புவதாய் மற்றொருவரும், அந்த மற்றொருவர் வந்த தடம் அழிந்து அதை நிரப்ப இன்னொருவரும் என வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் இந்த வாழ்க்கையில்.. ஆனால் அந்த இடம் மட்டும் இன்னும் வெறுமை தந்தவரின் நிஜத்தை மட்டுமே தாங்கி நின்று கொண்டிருக்கிறது என்பதே அன்பின் நிலையும், நிதர்சனமுமாய்!!

உன்னிடம் மட்டும் மறந்தேன்🤦🏻‍♂️

நீ தின்று வீசிய சாக்லேட் கவர்; உன் கூந்தல் ஏறி உதிர்ந்த ரோஜா இதழ்; நீ கடித்துக் கடித்தே கலரும் வடிவமும் மாறிப் போன அந்த பேனா மூடி; உன் பெஞ்ச்சில் நான் கிறுக்கிய நமது பெயர்; உனக்குத் தெரியாமல் உன்னிடமிருந்து நான் உறுவிய உன் பூப்போட்ட கைக்குட்டை; இவற்றுக்கெல்லாம் சொன்ன, இன்னமும் சொல்லிக்  கொண்டேயிருக்கும் என் காதலை, ஏனோ உன்னிடம் தான் மறந்து போனேன் இறுதிவரை சொல்ல!!

நீயென் வரமா சாபமா..

மேல் பொழியும் மழையை, இரவு நிரப்பும் நிலவை, ஓயாத அந்த கடலை, குறையாத இந்த காற்றை, அசைய மறுக்கும் மலைகளை, ஆசை காட்டி மறையும் நட்சத்திரங்களை, சில நல்லவைகளை பல கெட்டவைகளை என எதையுமே உன் நினைவு வராமல் ரசிக்க முடியவில்லை இப்போதெல்லாம்!! இது பிடிக்கிறதா இல்லையா என்று கூட தெரியவில்லை எனக்கு!! நீ என் வரமா சாபமா புரியவில்லை.. எதுவாயினும் அது நீயாயிற்றே!!

நீ வருவாய் என..

உடைந்து போன என்னை ஒட்ட வைக்க உன்னால் மட்டுமே முடியுமென என்னை ஏந்தியபடி ஓடிவந்து வெகுநேரமாக காத்திருக்கிறேன் உனக்காக.. முன்பெல்லாம் எத்தனை கஷ்டமென்றாலும் எப்படியேனும் மெனக்கெட்டு என்னை நானே சரிசெய்து கொள்வேன் கொஞ்சம் கொஞ்மாக.. 'எப்போது உடைந்தாலும் என்னை கூப்பிடு அல்லது இங்கு வா நான் இருக்கிறேன்' என்று நீ சொன்ன பின்பு, சிறு கீறலுக்குக் கூட இப்போதெல்லாம் உன்னை எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டேன்!!

வாழ்ந்துட்டுதான் போட்டுமே!!

வடக்கன்ஸ் வர்றானுங்க.. வடக்கன்ஸ் வர்றானுங்க.. என்று படாத பாடு பட்டு கூப்பாடு போட்டோம்.. இனி கூப்பிட்டாலும் வர முடியாத தூரத்திற்கு சென்று விட்டார்கள் அவர்கள்.. அடுத்த ரயிலிலும் ஒரு வேளை வரலாம் மீண்டும் அவர்கள்.. அவர்கள் வருவதெல்லாம் சில வேளை உணவுக்காகவும், உடல் உழைத்து கரைந்து உங்களை கரையேற்றி அப்படியே முடிந்தால் கொஞ்சம் அவர்கள் குடும்பங்களையும் கரையேற்றிக் கொள்ளத்தானே! அதோ அடுத்த ரயிலிலும் வந்துட்டானுங்க வடக்கன்கள் என்பீர்கள்.. வந்துவிட்டுத்தான் போட்டும் விடுங்களேன்! வடக்கன்கள் என்ன! வந்தேறிகள் என்ன! நீங்கள் என்ன, நானென்ன! எல்லாம் ஒரு நாளில் ஒரு சில நிமிடங்களில் கண்ணிமைத்து திறக்கும் பொழுதில் நடந்து விடுகிறது.. வடக்கன்கள் இங்கே பிழைப்புக்காக வருவாதானால் வரட்டுமே.. வாழத்தானே இந்த வாழ்க்கை! எப்படியாயினும் எதுவாயினும் வாழத்தானே எல்லாமே.. அலைந்து திரிந்து அலைக்கழிந்து இறுதியில் எல்லாமே இந்த அரைஞாண் வயிற்றுக்குத்தானே.. அதே வயிறுதானே அவர்களுக்கும், வாழுந்து விட்டுத்தான் போட்டுமே!!

தைரியம் தான் Matters!!

முடிவை தீர்மானிக்க மட்டுமே பெரும் தைரியம் தேவையாய் இருக்கிறது நமக்கு.. மற்றபடி அந்த முடிவை செயல்படுத்துவதை எல்லாம் அந்த தைரியமே பார்த்துக் கொள்ளும்!!

இளையராஜா எனும் இசை அரக்கன்!!

இளையராஜாவின் பாடலை எல்லாம் ஒரு முறை கேட்டுவிட்டு அடுத்த பாடலுக்குத் தாவி விடுபவர்கள் ஆச்சர்யம் அளிக்கிறார்கள் எனக்கு.. காலையில் இருந்து முப்பத்து மூன்றாவது முறையாக ஓடிக் கொண்டே இருக்கிறது  'தென்றல் வந்து தீண்டும் போது' பாடல்! எப்போதுதான் அலுக்கிறதென்று நானும் பார்க்கிறேன்!!

படைத்தவன் என்னும் பரதேசி 😤

நானும் கடவுளை நம்புகிறேன்.. நீங்கள் பாதுகாக்கும் கடவுளை அல்ல நம்மை படைத்த அந்தக் கடவுளை.. அவனுக்கு நம்மை காக்க வேண்டும் என்ற அவசியமே கிடையாது போல.. நாம் இருப்பதே அவனுக்கு தெரியுமோ தெரியாதோ.. படைத்துவிட்டு எங்கோ போய் ஊர் மேய்ந்து கொண்டு திரிகிறான் பைத்தியக்காரன்.. அந்தப் பரதேசியால் தானே இதெல்லாம்😤😤