அடித்தொண்டை விரிய அண்ணாந்து பார்க்கையில் எல்லாம் வசீகரிக்கும் அந்த வானம், ஆளற்ற இந்த மாடிவெளியில் நானும் என் நாய்க்குட்டியும், அங்குமிங்கும் புத்தகத்தாளை புரட்டிப்போட்டு விளையாடும் காற்று, அமர்வதும் பறப்பதுமாய் அங்குமிங்கும் வட்டமடித்துக் கொண்டே ஒலியெழுப்பும் பறவையொன்று, குடித்து முடித்து பாதி காய்ந்த குளம்பிக் குவளை, கைநிறைய கொள்ளா அளவு கவிதை, இசையால் இதயம் நிறைக்க ராஜாவின் கீதம், போதாதா இவை? எப்போதும் உடன் பயணித்து உள்ளம் கிளறிப் பார்க்கும் இந்த வெறுமையை விரட்டியடிக்க !!